கோடை காலம் தொடங்கிய நிலையில் உணவு மற்றும் மனித அத்யாவசியத் தேவைகளில் கோடையின் உஷ்ணத்தை தணிக்க பெரும் பங்கு சமாளிக்க அங்கம் வகிப்பது எலுமிச்சை கோடை கால ஆரம்பத்திலேயே எலுமிச்சை விளைச்சல் குறைந்த நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து வரத்தும் குறைந்துள்ளதால் எலுமிச்சை விலை கிடு கிடு உயர்வை எட்டியுள்ளது.
மொத்தமாக விற்பனை செய்யும் உழவர் சந்தையிலும் விற்பனைக்கு எலுமிச்சை வராததால் மார்க்கெட்டில் ஒரு பழம் ரூபாய் 8 முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது இதனால் குளிர் பானம் விற்பனை செய்யும் கடைகளில் லெமன் சால்ட் எனப்படும் ஒருவகை செயற்கை உப்பின் மூலம் எலுமிச்சை பழரசம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது இது மனித ஆரோக்கியத்திற்க்கு கெடுதி விளைவிப்பதாகும்.
வெளி மாநிலமான ஆந்திராவிலும் விளைச்சல் குறைவாக உள்ளதால் ஆந்திராவிலிருந்து இறக்குமதி செய்வதால் கடுமையான விலை உயர்வை சமாளிக்க முடியாமல் வியாபாரிகள் திணறுகின்றனர் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய இயலாமல் வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக