தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் (60) விவசாய தொழிலை மேற்கொண்டு ஆடுகளை மேய்த்து வருகிறார்.
கடந்த 27- ஆம் தேதியன்று ஆடுகளை மேய்ப்பதற்காக காட்டுப்பகுதியில் சென்றுள்ளார். அப்போது பெரிய ஆடு ஒன்று வந்து பெரியண்ணன் பின்புறம் முட்டி உள்ளது இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த பெரியண்ணனை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இரண்டு நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு எந்தவித பலனும் இன்றி பெரியண்ணன் இன்று உயிரிழந்தார், இதுகுறித்து பாலக்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

