Type Here to Get Search Results !

முதியோர் இல்லங்கள் மற்றும் மகளிர் பணிபுரியும் விடுதிகள் பதிவு செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சியர்.

தருமபுரி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மற்றும் மகளிர் பணிபுரியும் விடுதிகள் மாவட்ட நிர்வாகத்தினால் முதியோர் இல்லங்கள் முதியோர் நலச்சட்டம் 2007 (ம) 2009-ன் கீழ் பதிவு செய்யப்பட்டும், மகளிர் பணிபுரியும் விடுதிகள் தமிழ்நாடு பெண்கள், விடுதிகள் மற்றும் குழந்தைகள் நல விதிகள் 2015-ன் கீழ் மாவட்ட நிர்வாகத்தின் பதிவு செய்து நடத்தப்பட வேண்டும். 

பதிவு செய்யாமல் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், கூடுதல் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தருமபுரி, தொலைப்பேசி எண்: 04342-23308 அணுகி பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பதிவு செய்யாமல் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884