தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளுக்கான வார்டு உறுப்பினர் தேர்தல் நடைப்பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று பாலக்கோடு பேரூராட்சியில் நடைப்பெற்றது. பாலக்கோடு பேரூராட்சி தேர்தல் அலுவலர் டார்த்தி வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களுக்கு பேருராட்சி மன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உறுப்பினர்கள் அரசியலமைப்பு சட்டப்படி உறுதி மொழி ஏற்று பதவி ஏற்று கொண்டனர். இதில் திமுகவை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் 15 பேர்,அதிமுகவைச் சேர்ந்த 2-பேர் சுயேட்சை ஒருவர் என மொத்தம் 18 பேர் பதவியேற்றுக்கொண்டனர். இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பேரூராட்சி அலுவலர்கள் காவல் துறையினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இன்று 18 வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை 4ஆம் தேதியன்று பாலக்கோடு பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அலுவலர் டார்த்தி தெரிவித்தார்.