இந்த காவிரி ஆற்றில் முதலை, நீர் நாய்கள், அறியவகை மீன் இனங்கள் வசிக்கிறது. குறிப்பாக ஒகேனக்கல் அடுத்த ராசிமணல் முதல் ஒகேனக்கல் அருவி வரை சுமார் 500 க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அடித்துவரப்பட்ட கரை ஒதுங்கும் முதலைகள் மற்றும் வறட்சியான காலங்களில் உணவுக்காக வெளியே வரும் முதலைகளை அப்பகுதியில் வனத்துறை சார்பில் முதலைகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர்.
முதலைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது சுமார் 200 க்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது, ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடமிருந்து கட்டணம் வசூலித்து பார்க்க அனுமதிக்கின்றனர்.
அப்போது முதலைகளை பராமரிப்பாளர்கள் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டும் என தடியால் முதலையயை அடித்து வாயை திறக்க சொல்லி துன்புறுத்தும் சம்பவம் ஒருபக்கம் இருக்க இங்குள்ள முதலைகளுக்கு வனத்துறை சார்பில் உணவு அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு முதலைகளும் 5 முதல் 100 கிலோ வரை இறைச்சி சாப்பிடும், ஆனால் முதலைகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை 5 கிலோ வரை மட்டும் உணவு அளிப்பதாக கூறப்படுகிறது. இதனால் போதிய உணவு இல்லாததால் முதலைகள் ஒன்றுக்கொன்று கடித்துக்கொள்கிறது, அப்படி கடித்துக்கொள்ளும் முதலைகளுக்கு காயங்கள் ஏற்பட்டும், கண்பார்வை குறைய ஆரம்பித்ததும் இறக்கும் பரிதாப நிலையும் உள்ளது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள முதலைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள முதலைகளுக்கு வாரத்திற்கு 4 முறைவது உணவளிக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு இதற்காக தனி நிதி ஒதுக்கி முதலைகளின் உயிரை காப்பற்ற வேண்டும் என வன உயிரியின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக