Type Here to Get Search Results !

50% மானியத்தில் வேளாண் விளைப் பொருட்கள் மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையம் அமைக்க அழைப்பு.

வேளாண்மை பொறியியல் துறையில் முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் மூலமாக, வேளாண் விளைப் பொருட்கள் மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையம் அமைக்கும் குழுவிற்கு 50% மானியம் வழங்கப்படவுள்ளது.

பதிவு செய்யப்பட்ட விவசாய கூட்டுறவு சங்கள் விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்களான எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு, தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, சிறிய வகை நெல் அரவை இயந்திரம், நெல் உமி நீக்கும் இயந்திரம், தானியம் அரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உடைத்து தரம் பிரிக்கும் இயந்திரம் மற்றும் மாவரைக்கும் இயந்திரம் உட்பட ஒன்றுக்கும் மேற்பட்ட இயந்திரங்களை அவற்றின் மொத்தவிலை ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பெற்று மதிப்பு கூட்டும் இயந்திர சேவை மையம் அமைத்துக் கொள்ளலாம்.

ஒரு சேவை மையம் அமைப்பதற்கு 50% அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இந்நிதியாண்டிற்கு தருமபுரி மாவட்டத்திற்கு 6 எண்களுக்கு ரூ.30.00 இலட்சம் மான்யம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. வேளாண் விளைப் பொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திர சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ளவர்களுக்கு மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட மதிப்பு கூட்டிய வேளாண் விளைப் பொருட்களை சேமித்து வைக்க போதுமான பாதுகாப்பான இடவசதி கொண்ட கட்டிடம் மற்றும் இயந்திரங்களை இயக்கத் தேவையான திறன் கொண்ட மும்முனை மின்சார இணைப்பு வசதி இருக்க வேண்டும்.

முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத் திட்ட விவசாய குழுக்கள் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட (கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம்) கிராம குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எனவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெற ஆர்வமுள்ள விவசாய குழுக்கள் தங்கள் விண்ணப்பத்தினை கீழ்கண்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. உதவி செயற்பொறியாளர் (வே.பொ), வேளாண்மை பொறியியல் துறை மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி, 04342 296132, 9443267032 உதவி செயற்பொறியாளர் (வே.பொ), வேளாண்மை பொறியியல் துறை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், திருப்பத்தூர் மெயின் ரோடு அரூர், தருமபுரி மாவட்டம். 04346296077, 9442007040 என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884