தருமபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகியவற்றிற்கான சாதாரண தேர்தல்கள் 2022-க்கான வாக்குப்பதிவு 19.02.2022 சனிக்கிழமை அன்று தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடைபெறும் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் எல்லைக்குள் மற்றும் அதனை சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மூலம் இயங்கி வரும் 37 அரசு மதுபானக்கடைகள், அத்துடன் இணைந்த மது அருந்தகங்கள் மற்றும் மதுபானம் விற்க உரிமம் பெற்ற தனியார் விடுதிகள் ஆகியவை 17.02.2022 வியாழக்கிழமை காலை 10.00 மணிமுதல் 19.02.2022 சனிக்கிழமை இரவு 12.00 மணி வரையிலும் விற்பனை இன்றி செயல்படாமல் மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தகடூர் குரல் நாவல்கள் படிக்க
.gif)
