Type Here to Get Search Results !

துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

தர்மபுரி மாவட்டம்,பென்னாகரம் வட்டம் தாசம்பட்டி கிராமத்தில்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்  கிளை மாநாடு நடைபெற்றது, கூட்டத்திற்கு தோழர் சேட்டு     தலைமை தாங்கினார் .கூட்டத்தில் பென்னாகரம் வட்டார செயலாளர் பி. முனியப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சி. மணி ஆகியோர் இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார்.இந்த கிளை மாநாட்டில்  வட்டக்குழு உறுப்பினர்கள் முருகன் , ராஜப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் தாசம்பட்டி யில் உள்ள துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும், தாசம்பட்டி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும், தாசம்பட்டி கிராமத்தில் பொது சுகாதார  கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்,  தாசம்பட்டி ஏரி கால்வாயை தூர்வார வேண்டும், தாசம்பட்டி யிலுள்ள சுடுகாட்டிற்கு தகன மேடை அமைத்து சுற்றுச்சுவர் ஏற்படுத்தி தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளை செயலாளராக  முருகன் ,துணை செயலாளராக சேட்டு கிளை பொருளாளராக பெருமாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர், இறுதியில் மாநாட்டில் கட்சி உறுப்பினர்களுக்கு வட்டார செயலாளர் பி. முனியப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சி. மணி ஆகியோர் கட்சி உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies