அஜித் குமார் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்த வலிமை திரைப்படம் பென்னாகரம் ராம் பாலாஜி தியேட்டரில் ரசிகர்களின் சிறப்பு காட்சியாக காலை 6 மணிக்கு திரையிடப்பட்டது 932 நாட்களுக்கு பிறகு பிறகு அஜித்குமாரின் திரைப்படம் வெள்ளித்திரையில் வெளிவந்தால் இதனை காண அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கூடினார்.
அசம்பாவிதங்களை தடுக்க தியேட்டர்க்கு உள்ளேயும் வெளியேயும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு மற்றும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க பேனர் மட்டும் அனுமதி, கட்ட அவுட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக