Type Here to Get Search Results !

அரூரில் நேரு யுவ கேந்திராவின் சார்பில் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் இளைஞர்களுக்கான சுய சார்பு இந்தியா மற்றும் நலவாழ்வு, நேர்மறை வாழ்க்கை நடைமுறை, ஆரோக்கியமான இந்தியா ஆகியவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று அரூர் ரவுண்டானாவில் உள்ள CSC கணினி  பயிற்சி மைய வளாகத்தில் பயிற்சி நிறுவனத்தின் கிளை மேலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

அரூர் இயற்கை நலவாழ்வு அமைப்பின் பேச்சாளர் தமிழ்வாணன், ஆதியோகி யோகா மைய ஆசிரியை ஜெயபிரியா, தமிழ் நாடு வாழ்வாதார இயக்க மாநில பயிற்றுநர் பெரியசாமி, நத்தள்ளி ஸ்பீடு தொண்டு நிறுவன துணைத்தலைவர் பெருமாள் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் கலந்து கொண்டு பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில்  சமூக ஆர்வலர் சரிதா, கணினி பயிற்சி நிறுவன பயிற்றுநர் கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிறைவாக நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர் ஜெய்கணேஷ் நன்றி கூறினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies