எட்டிக்குழி கிராமத்தில் சுடுகாடு வசதி செய்து தரவேண்டும். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

எட்டிக்குழி கிராமத்தில் சுடுகாடு வசதி செய்து தரவேண்டும்.

தர்மபுரி மாவட்டம்,பென்னாரம் வட்டம் எட்டிக்குழி கிராமத்தில்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்  கிளை மாநாடு நடைபெற்றது.

கூட்டத்திற்கு தோழர் முனுசாமி தலைமை வகித்தார், கூட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி மாதையன்  கலந்து கொண்டு இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார். இக்கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள்  பழனி, இல. தர்மராஜா  ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் எட்டிக்குழி  கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இதுநாள் வரை இங்கே பொது  சுடுகாடு இல்லாமல் உள்ளது எனவே, எட்டிக்குழியில் சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கீடு செய்து மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

எட்டிக்குழியிலிருந்து பொடாரன் கொட்டாய், கருப்பன் கொட்டாய், இருசன் காட்டுக்கொட்டாய் வழியாக  சின்னம்பள்ளி வரை செல்லும் மண் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும். எட்டிக்குழி  கிராமத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கிளை செயலாளராக  முனுசாமி, துணை செயலாளராக அர்ஜுனன், கிளை பொருளாளராக அழகம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

மாநாட்டில் கட்சி உறுப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி.மாதையன் மாவட்ட குழு உறுப்பினர்  பழனி ஆகியோர் கட்சி உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad