வரும் 27- தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்த்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

வரும் 27- தேதி 5 வயதுக்குட்பட்ட குழந்த்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த (2021) ஆண்டு நடைபெற்ற தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் ஐந்து வயதிற்குட்பட்ட 1,53,919 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட டது. 

அதுபோலவே இந்த (2022) ஆண்டும் வருகின்ற 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் 1,47,595 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் இப்போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக கிராமப்பகுதியில் 964 முகாம்களும், நகராட்சி பகுதியில் 20 முகாம்களும் என மொத்தம் 984 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிக்காக பொது சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என் சுமார் 4080-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

மேலும் அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், திரை அரங்குகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுங்கச்சாவடி போன்ற இடங்களிலும் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

சமுதாயத்தில் பின் தங்கியுள்ள மக்களான நாடோடிகள், நரிக்குறவர்கள், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலை கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக சுகாதாரத்துறை மற்றும் பிற துறை சார்ந்த 58 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்து தரமானது, வீரியமிக்கது, பாதுகாப்பானது. எனவே தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் குறிப்பாக தாய்மார்கள், பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் உள்ள அன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே பலமுறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் வருகின்ற 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்களில் அளிக்கப்படும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அனைத்து அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து தருமபுரி மாவட்டம் போலியோ நோய் இல்லாத மாவட்டமாக இருக்க இந்த தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad