தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தபடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒகேனக்கல் சுற்றுலா தளம் உள்ளது. கூத்தபடி பஞ்சாயத்தில் ஜக்கம்பட்டி என்னும் இடத்தில் ஏற்கனவே அரசு மதுபான கடை ஒன்று உள்ளது இந்த நிலையில் மடம் சோதனைச்சாவடி ஒகேனக்கல் செல்லும் சாலையில் இன்னொரு மதுபான கடை அமைக்க கட்டுமானப் பணி தொடர்கிறது.
ஒகேனக்கல் சுற்றுலா தளமானது தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகவும் இங்கு சுற்றுலாப் பயணிகள் மடம் சோதனைச்சாவடி வழியாக ஏராளமானோர் வாகனங்களில் செல்கின்றனர் இச்சாலை மலைச்சாலை என்பதால் வளைவுகள் நிறைந்த சாலையாக உள்ளது இந்த நிலையில் அரசு மதுபான கடை ஒகேனக்கல் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டால் அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு இடையூறாகும் மற்றும் அதிக விபத்து ஏற்படுத்தும் வகையிலும் இருக்கக்கூடும் அதுமட்டுமின்றி குடிபோதையில் அடிக்கடி சோதனைச்சாவடியில் தகராறுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அரசு மதுபானக்கடை மடம் சோதனைச் சாவடியில் அமைக்கக்கூடாது என்றும் ஒகேனக்கல் செல்லும் வழியில் எவ்விடத்திலும் மதுபான கடை அமையக் கூடாது என்றும் ஊர் பொதுமக்கள் கூறுகின்றனர்.
.gif)
