தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் .ச.திவ்யதர்சினி இன்று காலை முதல் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் – 2022 முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் மொத்தம் 20க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 7.00 மணி முதல் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றது. இதனை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, இன்று காலை முதல் பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட முள்ளுவாடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பென்னாகரம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
.gif)
