காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் 1 கிலோ வெள்ளி 113 கிராம் தங்கம் இருசக்கர வாகனத்தில் இருந்து கொள்ளை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 பிப்ரவரி, 2022

காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் 1 கிலோ வெள்ளி 113 கிராம் தங்கம் இருசக்கர வாகனத்தில் இருந்து கொள்ளை.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே காவல் நிலையம் முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அடகு கடை உரிமையாளரிடம் இருந்து பையில் சுமார் ஒரு கிலோ  வெள்ளி மற்றும் 113 கிராம் தங்கம் கொண்ட பையை கொள்ளையடுத்து எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகரத்தின் மையத்தில் மோகன்லால் என்பவர் அம்பிகா அடகு கடை என்னும் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம் போல இரவு 8.30 மணிக்கு கடையை மூடிவிட்டு கடையில் இருந்த நகைகளை இரண்டு பையில் அவரது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார்.அப்போது வேப்பனப்பள்ளி காவல் நிலையம் முன்பு வரும் போது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரண்டு நபர்கள் திடீரென்று வண்டியின் அருகே வந்து அவர் முன்னே வைத்திருந்த நகை பையை எடுத்துக் கொண்டு வேகமாக சென்றுவிட்டனர். 

இதையடுத்து நகைப்பை எடுத்துக் கொண்டு செல்லும் இருசக்கர வாகனத்தை மோகன்லால் தொடர்ந்து பின்பற்றி உள்ளார் ஆனால் அவர்கள் வேகமாக சென்று விட்டதால் அவர்களை பிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மோகன்லால் வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதில் 1 கிலோ வெள்ளி 113 கிராம் தங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில் வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது காவல்நிலையம் முன்பே அடையாளம் தெரியாத இருவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து மோகன் அவளிடமிருந்த பையைப் பிடுங்கி செல்வது சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது. 

இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் தற்போது அவரை போலீசார் நகையை திருடிச் சென்ற இரு நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். காவல் நிலையம் முன்பு இது நடந்த திருட்டு இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad