இந்த கோழிப்பண்ணை ஊரை ஒட்டியே உள்ளது.இதனால் ஈக்கள், வண்டுகள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மூச்சு திணறல், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு அவதி யடைகின்றனர். மேலும் கால்நடைகளும் பெரிதும் பாதிக்கப் படுகிறது.விவசாய பயிர்களும் பாதிப்படைகின்றன.எனவே இந்த கோழிப்பண்ணையை அகற்ற வலியுறுத்தி தேவர் ஊத்துப்பள்ளம் கிராம பொது மக்கள் இன்று கருப்புக் கொடிகளுடன் ஏந்தி கோஷமிட்டப்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, கோழி பண்ணையை வேறு இடத்துக்கு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த கட்டமாக சாலை மறியல், உண்ணாவிரதம் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இதுபற்றி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக