Type Here to Get Search Results !

அடிக்கடி சாலை விபத்து ஏற்படும் இடங்களை ஆய்வு செய்த எஸ்.பி.வெங்கடேஸ்வரன்., MLA.

தருமபுரியில் விபத்துக்கள்  ஏற்படுகின்ற சாலைகளை தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி.வெங்கடேஸ்வரன்  அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார் 

தருமபுரி சட்டமன்ற தொகுதி, கிருஷ்ணகிரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய கிராமங்களுக்கு செல்லும் பிரிவு சாலைகளில் பொதுமக்கள் சாலையை கடந்து செல்லும் போது விபத்துக்கள் ஏற்பட்டு பலத்த காயங்களும், சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. விபத்து சம்பவங்களை தடுக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைக்க கோரி தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்களுக்கு நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் தொடர் கோரிக்கைகளின் அடிப்படையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் குலோத்துங்கன், L&T  திட்ட இயக்குநர் சிவக்குமார், L&T பராமரிப்பு மேலாளர் சின்னதுரை ஆகியோருடன் புதிய மேம்பாலங்கள் அமைக்க கோரும் இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கிருஷ்ணகிரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்கல் பிரிவு சாலை, பாளையம்புதூர் பிரிவு சாலை, சேசம்பட்டி பிரிவு சாலை, தேவர்ஊத்துப்பள்ளம் பிரிவு சாலை ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைத்தல் மற்றும் கிருஷ்ணகிரி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நல்லம்பள்ளி பிரிவு இணைப்பு சாலைக்கு தார்சாலை அமைத்தல் போன்றவற்றை பொதுமக்களின் நலன் கருதி திட்ட மதிப்பீடு செய்து அதற்கான அறிக்கையை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுப்பி வைத்து உடனடியாக மேற்கண்ட திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகளுடன் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பாமக ஒன்றிய செயலாளர்கள் அறிவு, சிவபிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் முத்துவேல், சிவக்குமார், தங்கதுரை, தமிழரசன், வையாபுரி, குப்பன், இராமமூர்த்தி, தவமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies