Type Here to Get Search Results !

பொதுமக்கள் முக கவசம் அணியாவிட்டால் அபராதம்; தண்டோரா மூலம் அறிவிப்பு.

தற்போது உலக நாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ்  அளவில் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒரு சில மாநிலங்களில் இந்த தொற்று கண்டயறியப்பட்டுள்ளது.

எனவே, கீழ்க்கண்ட அறிவுரைகளை பொதுமக்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். வணிக வளாகங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்.

மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனி நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும் பொழுது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு தனிநபரும் கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசும் மாநில அரசும்  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி அவர்களின் உத்தரவின் படி வேப்பனப்பள்ளியில் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என வருவாய் துறை சார்பில் பொதுமக்களுக்கு தண்டாரோ மூலம் அறிவிக்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies