தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதிக்கு உட்பட்ட சித்தேரி மலைகிராம பஞ்சாயத்தில் 62 கிராமங்களில் மலைவாழ் மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இந்த பஞ்சாயத்தில் உள்ள அழகூர்ஜக்கம்பட்டி பகுதியில் ஒரே பாறையில் அமைந்துள்ள மலை உச்சியின் மீது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3600- அடி உயரத்தில் பொட்டமலை மீது எழுந்தருளியுள்ள ஸ்ரீ கரியபருமாள்வெங்கட்ரமண சுவாமி கோவிலில் தை மாதம் பொங்கல் அடுத்த கரி நாளில் கிராம மக்கள் ஒன்று கூடி அலங்கரிக்கப்பட்ட சாமியை தோல்மீது தூக்கியவாறு ஒத்தையடி பாதையில் நடந்து சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் சித்தேரி பஞ்சாயத்தில் அரசர் காலத்திலிருந்து தொடர்ந்து குரு என்று அழைக்கப்படும் வம்சாவளியில் லட்சுமணன், மந்திரி பூபாலன், கிராமத்தின் ஊர் கவுண்டர்கள். தலைமையில் 10 நாட்களுக்கு முன்பாகவே மலைவாழ் மக்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருந்து அருள்மிகு ஸ்ரீ கரியபருமாள் வெங்கட்ரமண சுவாமி கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இவர்கள் குல வழக்கப்படி சாமி ஊர்வலத்தின் போது பெண்கள் கும்மிபாட்டுபாடி விளையாடிய பிறகு அனைவருக்கும் பொங்கலை பிரசாதமாக வழங்கினர்.
இந்தப் பொங்கல் விழாவில் கருமந்துறை, வத்தல்மலை, கொல்லிமலை, ஜவ்வாதுமலை, கள்ளக்குறிச்சி, ஏற்காடு உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்து ஏராளமான மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.
.gif)
