தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாம் அலை வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளை விதித்தது இந்த கட்டுப்பாடுகளில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது கடந்த வெள்ளிக்கிழமை இரவு பத்து மணி முதல் காலை 5 மணி வரை அமலுக்கு வந்தது அதைத்தொடர்ந்து இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததுள்ளளதால்.
பென்னாகரம் கடைவீதி மற்றும் ஒகேனக்கல் சுற்றுலா தளம் வருடங்கள் முழுவதும் பரபரப்பாக காணப்படும் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலுக்கு வந்ததால் பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் கடைவீதி புதிய பேருந்து நிலையம் அனைத்து இடங்களிலும் மக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் ஞாயிற்றுக்கிழமை என்றாலே ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு அதிகமாக காணப்படும் நிலையில் இன்று முழு ஊரடங்கு என்பதால் சுற்றுலா பயணிகளின்றி ஒகேனக்கல் சுற்றுலா தளம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் காவல்துறையினர் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். தேவையின்றி சாலையிகளில் பைக்கில் வருபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்புகின்றனர்.
.gif)
