கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அமல்படுத்தியுள்ளது. இதில் அத்தியாவசிய பால், மருந்தகம், உள்ளிட்ட கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மற்ற அனைத்து கடைகளும் மூட உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கிராம புறங்களில் இருந்து பாலக்கோடு நகருக்குள் நுழைய முடியாத அளவிற்கு பிரதான சாலைகள் முழுவதும் தடுப்பு வேலிகள் அமைத்து காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திவீர வாகன சோதனை செய்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதித்து வருகின்றனர். இதனால் கிராம புறங்களில் இருந்து வருபவர்கள் பாலக்கோடு நகருக்குள் நுழையாமல் திரும்பி செல்கின்றனர்.
.gif)
