நல்லம்பள்ளி அருகே தின்னஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார், கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி யோகபிரியா (வயது20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த யோகபிரியாவிற்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
நேற்று காலை வீட்டில் யோகபிரியா தனது குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். அப்போது அந்த ஆண் குழந்தைக்கு திடீரென முச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் குழந்தையை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை மர்மமாக இறந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.gif)
