கடந்த 20.12.21 முதல் 26.12.21 வரை 7 நாட்களில் எழுதி முடித்தனர். இந்த நிகழ்வை இன்டியன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினார்.
சாதனை படைத்த ஆசிரியர் த. புனிதவள்ளி அவர்களுக்கு திருக்குறள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த ஆசிரியர் திருக்குறளை செப்புத் தகடுகளில் எழுதி சாதனை படைத்தது முதலாவது உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
உலகத் திருக்குறள் மைய நிறுவனர் தலைவர் கு.மோகனராசு, சென்னை ராக்ஸ்டார் மீடியா குளோபல் நிறுவனர் டாக்டர் ராகவி பவனேஸ்வரி. மலேசியா இணையவழியாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர், மாவட்ட தொடர்பு அலுவலர் திரு. இளங்கோ முன்னிலை வகித்தார்.
ஜெயம் பொறியியல் கல்லூரி இயக்குனர் மனோஜ் மவுரியா,முதல்வர் சுப்பராயன் கலந்து கொண்டனர், பேராசிரியர் கண்ணம்மாள் மற்றும் சுகாதார ஆய்வாளர் தே.தயாள்ராஜ் விழாவை ஒருங்கிணைப்பு செய்தனர்.
தர்மபுரி கலைக் கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், பேராசிரியர் சந்திரசேகர், கவிஞர் இரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர், விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசாக புத்தகம் வழங்கப்பட்டது.
.gif)
