கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தமிழக தொழிலாளர் நல வாரியங்களின் ஆலோசனைக்குழு உறுப்பினர், வழக்கறிஞர் இளஞ்சூரியன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறுகையில்:
பொங்கலுக்காக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்த தமிழக அரசு, தொழிலாளர்களை நினைத்து பார்க்கவில்லை, அதிமுக ஆட்சியில் வழங்கிய உதவிகளை உயர்த்திக்கேட்ட திமுக, தற்போது கண்டுக்கொள்ளவே இல்லை, எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் அமைப்புசாரா தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர், அதிமுக ஆட்சியில் தான் அவர்களின் நலன் காக்கப்பட்டது என்றும், பொங்கல் பண்டிகைக்கு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வாழ்வாதார தொகை அறிவிக்காவிட்டால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு படுதோல்வியை தொழிலாளர்கள் தேடி தருவார்கள் என கூறினார்.
.gif)
