பின்னர் அவர் பேசும்போது தேசப்பிதா மகாத்மா காந்தி நாட்டிற்காக தியாகம் செய்த சேவை செம்மல் அவருக்கு மத்திய அரசும் மாநில அரசும் அவர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மேதகு குடியரசுத் தலைவர் மேதகு பாரத பிரதமர் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து முதலமைச்சர் அவர்களுக்கும் கவர்னர் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அதே சமயத்தில் தமிழகத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு கருப்பு கம்பி இரும்பு கம்பி அமைத்து கூண்டில் வைத்து பாதுகாக்கப்படுகிறது இவைகளை அகற்றிட வேண்டும் முக்கிய இடங்களில் உள்ள மகாத்மா காந்தி சிலைகளுக்கு தலா ஒரு போலீஸ் காவல்துறை மூலம் தினமும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மேலும் தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் தேசப்பிதா மகாத்மா காந்தி திரு உருவ சிலைகள் வைத்தல் வேண்டும் இதற்காக அரசு முன்வர வேண்டும் மேலும் சேவை செம்மல் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களுக்கு கிருஷ்ணகிரியில் ஒரு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் இவ்வாறு தேசியவாத காங் கட்சியின் மாவட்ட தலைவர் டாக்டர் சந்திரமோகன் பேசினார்.
நிகழ்ச்சியில் தேசியவாத கட்சியின் மாவட்ட மகளிரணி தலைவி எலிசபெத் ராணி, மாவட்ட இளைஞரணி தலைவர் தியாகச் செல்வன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரகு, மாவட்ட பொருளாளர் செந்தில், மாவட்ட துணைத் தலைவர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டு மகாத்மா காந்தி திருவுருவப் படத்திற்கு மலர்தூவி வணங்கினார்கள் முன்னதாக தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.