நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு இந்திய குடியரசு கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் எம்.ராஜேந்திரன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சியை அனைத்து தரப்பு மக்களுக்கும் வரவேற்கின்றனர். தமிழக அரசு பல்வேறு சிறந்த நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு இந்திய குடியரசு கட்சி ஆதரவு தெரிவித்து தேர்தல் பணியில் ஈடுபடும் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.