பர்கூரில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கையொட்டி, பிரதான சாலைகள் முழுவதும் காவல் துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர சோதனை.
கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அமல்படுத்தியுள்ளது. இதில் பால், மருந்தகம், மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மற்ற அனைத்து கடைகளும் மூட உத்தரவிட்டுள்ளது.
கிராம புறங்களில் இருந்து பர்கூர் நகருக்குள் நுழைய முடியாத அளவிற்கு பிரதான சாலைகள் முழுவதும் தடுப்பு வேலிகள் அமைத்து காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திவீர வாகன சோதனை செய்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதித்து வருகின்றனர். இதனால் கிராம புறங்களில் இருந்து வருபவர்கள் பர்கூர் நகருக்குள் நுழையாமல் திரும்பி செல்கின்றனர்.
.gif)
