Type Here to Get Search Results !

மகளை பார்க்க சென்ற தம்பதியினருக்கு வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் விவசாயியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களின் மூத்த மகளுக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மகளை பார்ப்பதற்காக முருகேசனும், சத்யாவும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர்.

இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு முருகேசன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து முருகேசன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies