மருதம் நெல்லி கல்விக் குழுமம், உயிர்களை காப்போம் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் வறட்சி இல்லா தமிழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஒமைக்ரான் வைரஸ் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தினர்.
மருதம் நெல்லியின் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாக மேலாளர் ரா.கணேஷ் நிகழ்விற்கு தலைமை வகித்தார். கல்லூரியின் வேதியியல் துறை பேராசிரியர்கள் மா.பாலாஜீ முன்னிலை வகித்தார். பேராசிரியர் பா.பெருமாள் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட துணை காவல் ஆய்வாளர் நவாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்களித்தில் ஒமிக்ரான் வைரஸ் குறித்தும் அவற்றை தடுக்கும் முறைகள் பற்றியும் விரிவாக பேசினார்.
தருமபுரி நான்கு வழி சாலையில் இந்நிகழ்வு நடைபெற்றது . நிகழ்வில் பொது மக்களுக்கு இலவசமாக முக கவசம் மற்றும் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது.
.gif)
