கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எலைட் ரோட்டரி சங்கம் சார்பாக நேற்று(07.01.22) சூடப்பா திருமண மண்டபத்தில் வசந்த் தொலைக்காட்சியின் பொங்கல் பட்டிமன்ற நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு ஓசூர் எலைட் ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn அறம்.கிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தார். தொடக்க நிகழ்வாக ஓசூரில் சிறந்து விளங்கும் பல்வேறு துறைகளை சேர்ந்த 16 நபர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து ஓசூர் எலைட் ரோட்டரி சங்கம் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்ட மூத்தோர் தடகள விளையாட்டு வீரர்கள் 60 நபர்களுக்கு ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டன.
மேலும் சிலம்பு விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெற்ற ஓசூர் அரசன் சிலம்பு பள்ளியை சேர்ந்த 10 மாணவர்கள் நேபாளம் காத்மாண்டுவில் ஜனவரி 16-20 வரை நடைபெறும் சர்வதேச அளவிளான இந்திய - நேபாள சாம்பியன்ஷிப் -2021-22 சிலம்பாட்ட போட்டியில் கலந்துகொள்ளும் வகையில் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
மேலும் ஓசூர் ஶ்ரீசாய் நகர் குடியிருப்போர் சங்கத்தின் நூலக பயன்பாட்டிற்காக ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் Rtn இராகவன் DGN, ரோட்டரி மாவட்ட ஆளுநர் நியமனம் மற்றும் ஓசூர் எலைட் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் இராசு, கனேஷ், ராஜரத்தினம், ராஜேஷ் ராவ், சங்கர் பாபு, சாம்ராஜ், வேடி, நிஷந்தன், தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து கவிஞர் சிநேகன் அவர்கள் தலைமையில் பொங்கல் சிறப்பு பட்டி மன்றம் நடைபெற்றது. ஓசூரை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். இந்த விழாவிற்கான முழு ஏற்பாட்டையும் திரு தர்மராஜ் மற்றும் திரு துரை ஆகியோர் செய்திருந்தினர்.
.gif)
