ஆண் வாக்காளர்கள் 11,124 நபர்களும்,12,181 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என மொத்தம் 23,308 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 1057 பேர் அதிகம் உள்ளனர். 3 வது வார்டில் 1919 அதிக வாக்காளர்களும், குறைந்த வாக்காளர்களாக 13 வது வார்டில் 802 பேர் உள்ளனர். மொத்தமுள்ள 18 வார்டில், 16 வார்டுகளில் ஆண்களை விட, பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளது.
நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி தமிழகத்தில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரூர் டவுன் பஞ்சாயத்தில் உள்ள 18 வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது தேர்தல் நடத்தும் அலுவலர் கலைராணி வேட்புமனு பெறுவதற்கு காத்திருந்தார் முதல் நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை.
வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 5 ஆம் தேதி பெறப்பட்ட வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 7 ஆம் தேதி வேட்புமனு திரும்ப பெறப்படும் நாளாகும். 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.