கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மைலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெருமாள் இவரது மகன் சதீஷ்குமார் இவர் கிருஷ்ணகிரி ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிய நிலையில் மனைவி ஜனனி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் சதீஷ்குமார் கிருஷ்ணகிரி ஆயுதப்படையில் பணியை முடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு இன்று காலை வந்து கொண்டிருந்தார் அப்போது வேலம்பட்டி அருகே தளிஅள்ளி என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த பிக்கப் வேன் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டு செல்லும் வழியில் சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.