கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கள் பண்டிகையை முன்னிட்டு மஞ்சு விரட்டு, எருது விடும் விழாகள் இப்பகுதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம், இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு, எருது விடும் விழாகள் அரசு விதிமுறைகள் படி நடக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சு விரட்டு மற்றும் எருது விடும் விழா நடத்த அனுமதி கோரி கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ் பாரம்பரிய மஞ்சு விரட்டு நல சங்கத்தினர் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனுவை விசாரித்த சூளகிரி வட்டாட்சியர் தங்கள் பகுதிகளில் எருது விழா நடத்தப்படும் தேதியை முன் கூட்டியே மனு மூலம் தெரிவிக்கப்பட வேண்டும், மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை செய்து அனுமதி குறித்து முடிவு எடுக்கபடும் எனவும் கூறினார்.
மேலும் தமிழ் பாரம்பரிய மஞ்சு விரட்டு நலச்சங்கதினர் விழா நடத்த அனுமதி வழங்க கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
.gif)
