ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் சித்ரா இத்திட்டம் குறித்து பயிற்சி அளித்தார். இப்பயிற்சியின் நோக்கம் கர்ப்பிணி பெண்களுக்கு போதிய சத்தான உணவு பொருட்களை வழங்குவதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாடின்றி ஆரோக்கியமாக பிறக்க வழிவகை செய்கிறது,
எனவே கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டசத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரை உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமானதாகவும் சரியான எடையுடன் பிறக்க வழிவகை செய்கிறது.
இதற்காக மத்திய மற்றும் மாநில அரசு போஷன் அபியான் எனும் திட்டத்தின் மூலம் கருவுற்றது முதல் குழந்தை பிறந்து வளரும் வரை ஆயிரம் நாட்கள் தொடர்ந்து திட்டம் கண்காணிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
இந்நி நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மேற்பார்வையாளர்கள் புனிதா, திலகம், கலா, விஜயா, .திட்ட ஒருங்கினைப்பாளர்கள் புவியரசன்,சுகந்தி கண்காணிப்பாளர் சிராஜ் பேகம், மனோன்மணி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
.gif)
