கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர் மாநில எல்லையில் அமைந்திருப்பதால் கர்நாடகா மாநில மதுப்பாக்கெட்டுகள் எளிதில் கிடைக்கும் வகையில் கள்ளதனமாக விற்கப்பட்டு வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் சனி,ஞாயிறு முழு ஊரடங்கு என்றும், தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு என அரசு அறிவிப்பு செய்ததால்.
கர்நாடகா மாநிலத்தில் 35 ரூபாய்க்கு விற்கக்கூடிய மதுப்பாக்கெடுகளை, முன்கூட்டியே பெற்று வந்து இன்று பாகலூர் சுடுகாட்டு பகுதியில் ஒரு மதுப்பாக்கெட் 150 ரூபாய் என விற்க்கப்பட்டு வருவதாக வந்த தகவலின்பேரில் பாகலூர் போலிசார், சுடுகாட்டு பகுதிக்கு சென்றபோது விற்பனை செய்த நபர்கள் மதுப்பாக்கெட்டுகளை விட்டு, குடிமகன்களுடன் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
போலிசார், தடை செய்யப்பட்ட 50க்கும் அதிகமான கர்நாடகா மாநில மதுப்பாக்கெட்டுகளை கைப்பற்றி, விற்பனை செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
.gif)
