Type Here to Get Search Results !

பொங்கல் பண்டிகையையொட்டி வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்.

தருமபுரி மாவட்டத்தில் பழைய தருமபுரி, முத்துக்கவுண்டன் கொட்டாய், கடகத்தூர், சோகத்தூர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு உருண்டை வெல்லம் உற்பத்தி செய்வது பிரதான தொழிலாக இருக்கிறது இந்தப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

ஒரு ஆலையில் சுமார் 5 முதல் 10 பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர் இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் உள்ள மைசூர், மாண்டியா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஆந்திராவிற்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

பண்டிகைக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்ப உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் உருண்டை வெல்லம் தயாரிக்க தேவையான கரும்பு தர்மபுரி மாவட்டத்திலேயே கிடைக்கிறது, பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் வெல்லம் உற்பத்தி சூடுபிடித்துள்ளது தற்போது உருண்டை வெல்லம் கிலோ ரூபாய் 42 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை சிற்பம் ரூபாய் 1260-க்கு விற்கப்படுகிறது இதுகுறித்து வெல்லம் உற்பத்தியாளர்கள் கடகத்தூர் பாப்பாரப்பட்டி சோகத்தூர் பகுதியில் 35க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் சிறு ஆலைகள் இயங்கி வருகின்றன, இதனை நம்பி 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ வெல்லம் ரூபாய் 52-க்கு விற்கப்பட்டது தற்போது உற்பத்தி அதிகரிப்பால் ரூபாய் 42 ஆக விலை சரிந்துள்ளது என்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies