Type Here to Get Search Results !

ஊத்தங்கரையில் முன்கள பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் திருநாள் முன்னிட்டு முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் எஸ்.பெரியசாமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கு.கணேசன், ஊத்தங்கரை இந்தியன் ரெட் கிராஸ் கிளை துணைத் தலைவர் எம்.ராஜா,  வழக்கறிஞர் த.பிரபாவதி மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலை வீரர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஊத்தங்கரையில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு தன்னார்வலர்கள் த.மோகன்ராஜ் மற்றும் த.அசோக் குமார் ஆகியோர் புடவைகள், வேஷ்டி, சட்டைகள் போன்றவற்றை வழங்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன நிர்வாகிகள் சி.உமா மகேஸ்வரி, ம.லட்சுமி, பேரூராட்சி சேர்ந்த பெரியசாமி, பழனி மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஆர்சி ஆசிரியர் கணேசன் செய்திருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies