சூளகிரியில் ஊரடங்கில் அனுமதியின்றி செயல்பட்ட இறைச்சி கடைகளுக்கு போலீசரால் அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொது மக்கள் நலன் கருதி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஊரடங்கில் அனுமதியின்றி செயல்பட்ட இறைச்சி கடைகளுக்கு சூளகிரி போலீசரால் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முக கவசம் அணியாமல் , ஊரடங்கின் போது வெளியில் சுற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்தும் , கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினார்.
.gif)
