அரூரை அடுத்த எச்.ஈச்சம்பாடி வாரச்சந்தை வளாகத்தில் கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் ஒன்றிய செயலர் எம்.எஸ்.மூவேந்தன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், எச்.ஈச்சம்பாடியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் வாரச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு கே.வேட்ரப்பட்டி, எஸ்.பட்டி, வடுகப்பட்டி, கணபதிப்பட்டி, கீழ்மொரப்பூர், பறையப்பட்டி, வேப்பநத்தம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் வந்துச் செல்கின்றனர்.
.gif)
