தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் ரூபாய் 21. 82 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட குளிர்பதன கிடங்கு தரம் பிரிப்பு மையம் சிப்பம் கட்டும் கூடம் தர நிர்ணயம் மற்றும் தர கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை இன்று தமிழக முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்துவைத்தார்.
இதைத்தொடர்ந்து பாப்பாரப்பட்டியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவர்கள் முதன்மை பதப்படுத்தும் மைய கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து முதன்மை பதப்படுத்தும் மையம் 2000 மெ. டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு தரம் பிரிப்பு மையம் சிப்பம் கட்டும் கூடம் தர நிர்ணயம் மற்றும் தர கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிஎன்பி இன்பசேகரன் வேளாண்மை துணை இயக்குனர் முகமது அஸ்லாம் உதவி இயக்குனர் புவனேஸ்வரி தோட்டக்கலை உதவி இயக்குனர் சக்தி வேளாண்மை மற்றும் விற்பனை குழு நிர்வாக அலுவலர் மணிராஜ் வருவாய் ஆட்சியர் அசோக்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
.gif)
