Type Here to Get Search Results !

முழு ஊரடங்கு; புகழ்பெற்ற போச்சம்பள்ளி சந்தை கூடாமல் வெறிச்சோடியது.

போச்சம்பள்ளியில் முழு ஊரடங்கு காரணமாக புகழ்பெற்ற ஞாயிற்றுக்கிழமை ஆட்டுச்சந்தை கூடாமலும் போக்குவரத்து இன்றி முக்கிய வீதிகள்  சாலைகள் வெறிச்சோடியது.

இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தியதின் காரணமாக  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற போச்சம்பள்ளி ஞாயிற்றுக்கிழமை ஆட்டு சந்தை இல்லாமலும் எப்போதும்  போக்குவரத்து நெரிசல் காணப்படும் போச்சம்பள்ளி பேருந்து நிலையம் மற்றும்   அனைத்து வீதிகளிலும் வெறிச்சோடியது., இந்தப் பகுதியில் வாகன நடமாட்டம் இன்றி அமைதியாக காணப்பட்டது.

போச்சம்பள்ளி ஞாயிற்றுக்கிழமை வார சந்தையானது ஆடு மற்றும் மாடுகள் அதிக அளவில் வியாபாரம் செய்யும் இடமாக திகழ்ந்தது இங்கு பண்டிகை காலம் என்றால் இந்த சந்தையில் சுமார் 3 லிருந்து 5 கோடி வரை வியாபாரம் நடைபெறும் ஆனால் ஞாயிற்றுக்கிழமை அன்று முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தியதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டு  வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் திருப்பத்தூர் வழியாக சென்னை செல்லும்  பேருந்துகள் வந்து செல்லும்  பேருந்து நிலையமாக செயல்பட்ட பேருந்து நிலையம் ஒரு பேருந்து கூட இல்லாமல் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies