Type Here to Get Search Results !

முழு ஊரடங்கு சூளகிரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உயர்ந்துவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக வார இறுதி நாளும், விடுமுறை நாளுமான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு முடக்கம் அமலில் இருக்கும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி முழு முடக்கம் காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. முழு ஊரடங்கு உத்தரவை மீறி வாகனத்தில் வெளியில் சுற்றுவோரை பிடித்து அபராதம் விதித்த போலீசார் பொதுமக்களை எச்சரித்து  அனுப்பினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies