Type Here to Get Search Results !

கோரோனா பரவல் எதிரொலி; தமிழக - கர்நாடக எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் அமைந்துள்ளதால் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி கொண்டே வருவதால் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்திருந்தது அதன்படி ஓசூர் முக்கிய வீதிகள் மற்றும் கர்நாடகா தமிழகத்தை இணைக்கும் ஜூஜூவாடி பகுதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அத்தியாவசிய தேவைக்கு வருபவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர் மற்றவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர் மருத்துவம் தொடர்பான கடைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது ஓசூரில் மக்கள் நடமாடும் பிரதான சாலைகள் மகாத்மா காந்தி சாலை நேதாஜி சாலை தாலுகா அலுவலக சாலை வெறிச்சோடி காணப்பட்டது கர்நாடக தமிழக எல்லையில் நுழையும் அத்தியாவசிய வாகனங்களைத் தவிர கார் பேருந்து உள்ளிட்டவைகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies