அரூர் அருகே கோட்டப்பட்டியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கோட்டப்பட்டியில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, கோட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், நோயாளிகளின் வருகை, மருத்துவமனைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, பொதுமக்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார். முன்னதாக, தீர்த்தமலை, சிட்லிங், நரிப்பள்ளி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.