Type Here to Get Search Results !

நாளை முழு ஊரடங்கு; உழவர் சந்தையில் குவிந்த மக்கள்.

நாடு முழுவதும் கொரோனோ 3வது அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது.  கொரோனா பரவலை  தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழக அரசு கொரோனா பரவலைதடுக்கும் பொருட்டுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது, அதன் படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும்  இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

நாளை ஞாயிற்றுக்கிழமை (09.01.2022) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்  உழவர் சந்தையில் இன்று காலை காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வாங்க கொரோனா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு மக்கள் கூட்டம் கடை தெருக்களில் அலைமோதியது.

காவல்துறையினரும், சுகாதார துறையினரும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணித்து இதுபோன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies