தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளான கணபதி கொட்டாய், கூசிக் கொட்டாய், காவாப்பட்டி, மணியகாரன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் இயங்கி வருகின்றன.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வெல்லம் உற்பத்தி செய்யும் கிரஷர்களை ஆய்வு செய்து இரசாயன பொருட்கள் கலப்படம் செய்துள்ளனரா என ஆய்வு செய்தார். மேலும் இரசாயன பவுடர்கள் கலக்காமல் வெல்லம் உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தார்.
ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வெல்லங்களின் மாதிரியை ஆய்வுக்கு எடுத்து சென்றார்.
.gif)
