தற்போது தருமபுரி அடுத்த அதியமான் கோட்டை பகுதியில் 10 சிசிடிவி காமிராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் கூடும் இடங்கள், முக்கிய சாலைகளில் காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் உத்தரவின்பேரில் டவுன் டி.எஸ்.பி. வினோத் மேற்பார் வையில் காமிராக் கள் பொருத்தும் பணி நடந்தது.
அதியமான் கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி களில் குற்ற சம்பவங் களை தடுக்க மேலும் 10 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தம்.
அந்த வகையில் தர்மபுரி, தொப்பூர் மதிகோன் பாளையம் அதியமான் கோட்டை உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் அதியமான் கோட்டை எல்லைக்குட்பட்ட முக்கிய சாலைகள் அமைந்துள்ள பகுதிகளான கக்கஞ்சிபுரம் ஜங்ஷன் குடி பட்டி, நல்லம்பள்ளி சந்தை, உள்ளிட்ட 10 இடங்களில் கூடுதலாக சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடந்தது. இதை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் இந்த பணிகள் மேற்பார்வை யிட்டார்.