கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே செல்போன் உயர்கோபுரம் அமைக்க வலியுறுத்தி அலுவலகம் முன்பாக சமூக நீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் 50க்கும் மேற்ப்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அடுத்த சூளகிரி வட்டத்திற்குட்பட்டது காளிங்கவரம் ஊராட்சி, இந்த ஊராட்சியில் உள்ள தின்னூர், கொடித்திம்மனப்பள்ளி,சின்ன மடத்தூர், அக்ரகாரம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் செல்போன் டவர் இல்லாமல் வர்த்தக,பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்லைன் வகுப்பு, தகவல் தொழில்நுட்ப வசதி இல்லாமல் வளர்ச்சியில் பின்நோக்கி சென்றதாக கிராம மக்கள் குற்றம்சாட்டும் நிலையில் 10 கிராம மக்களின் நலனிற்காக செல்போன் உயர்கோபுரம் அமைக்க வலியுறுத்தி சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சமூக - நீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.