Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் பாஜக சார்பில் சமத்துவ பொங்கல் விழா.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சர்க்கரை ஆலை கூட்ரோடு பகுதியில் பாலக்கோடு நகர  பாஜக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, இவ்விழாவிற்கு பாலக்கோடு நகர தலைவர் சிவா தலைமை வகித்தார்.

மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆரியவரதராஜ், முரளி, நகர துணை தலைவர் ராமரு, பொது செயலாளர் சத்தியவேல், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய தலைவர்கள் மற்றும் , சிவக்குமார், கார்த்திக், திருப்பதி, தண்டபாணி, ஹரிராம், பழனி, பரசுராமன் மற்றும் அப்பகுதி பெண்கள் கலந்து கொண்டு செங்கரும்புடன், புது பானையில் பச்சரிசி, வெல்லம், பால் உள்ளிட்ட பொருட்களை  போட்டு  பொங்கி வந்தவுடன் பொங்கலோ பொங்கல் என்று குரலெழுப்பி சமத்துவ பொங்கல் கொண்டாடினர், வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies