தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த திமுகவினரிடம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் தலைமையில் நேர்காணல் நடந்தது.
பாலக்கோடு பயணியர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தேர்தல் பொறுப்பாளர்களான மாநில வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர், தர்ம செல்வன், பாலக்கோடு தெற்கு ஒன்றி செயலாளர் குட்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மேற்கு ஒன்றிய துணை செயலாளர் முருகன், தகவல் தொழில்நுட்ப அணி மருத்துவர் ஆனந்த், நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் பட்டுஅஜிசுல்லா மற்றும் நகர செயலாளர் முரளி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த நேர்கானலில் ஏராளமான கட்சி தொண்டர்களும், பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
.gif)
